நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச. 12) தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜயின் வாழ்த்து செய்தியில், "பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.