கரும்பு சாறு இயந்திரத்தில் சிக்கி நசுங்கிய கை.. (வீடியோ)

30605பார்த்தது
தொழிற்சாலை உள்ளிட்ட இயந்திரப் பணிகளில் ஈடுபடுவோரின் ஒரு நொடி கவனக்குறைவும் உயிரைப் பறிப்பதற்கு சமம். அந்த வகையில், கரும்பு சாறு இயந்திரத்தில் ஒருவர் கரும்பு சாறு பிழியும் பணியில் ஈடுபட்டுள்ளார். கரும்பை இயந்திரத்தின் அரவை பகுதிக்குள் நுழைக்கும் போது கவனக்குறைவாக அவரது கையும் உள்ளே இழுத்துச் சென்றது. இதில் அவரது கை விரல்கள் நசுங்கின. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடந்ததாக தெரிகிறது.

குறிப்பு: கரும்பு சாறு இயந்திரங்கள் மற்றும் பிற மின்சார இயந்திரங்களில் வேலை செய்யும் போது கவனமாக இருங்கள்.

தொடர்புடைய செய்தி