இளைஞரை தாக்கிய ஜிம் பயிற்சியாளர்.. (வீடியோ)

56பார்த்தது
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை முலுண்ட் ஈஸ்ட் பகுதியில் உள்ள ஜிம்மிற்கு 20 வயதான யோகேஷ் ஷிண்டே கடந்த இரண்டு வருடங்களாக சென்று வருகிறார். இவர் கடந்த 17ஆம் தேதி ஜிம்மில் பயிற்சியாளர் உதவியுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது யோகேஷ் ஜிம் பயிற்சியாளரை கேலி செய்து சிரித்ததாக தெரிகிறது. இதற்கிடையில், ஜிம்மின் ஒரு ஓரத்தில் நின்றிருந்த மற்றொரு பயிற்சியாளர் தாராவி, யோகேஷை தலையில் அடித்தார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி