லாரிக்கு அடியில் சிக்கி மூதாட்டி பலி - பதறவைக்கும் வீடியோ

44785பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் அமர்பதன் பகுதியில் நேற்று அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையை கடக்க முற்பட்ட மூதாட்டி மீது அங்கு வேகமாக வந்த டிரக் ஒன்று மோதியது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர். விபத்து தொடர்பான பதறவைக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி