தோளில் போட்டு சாகசம்.. டென்ஷன் ஆகி கொத்திய நாகம்

574பார்த்தது
தோளில் போட்டு சாகசம்.. டென்ஷன் ஆகி கொத்திய நாகம்
ஆபத்தான சாகசம் செய்ய நினைத்தவரை பாம்பு கடித்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் குருவாயூரில் கோவில் வளாகத்தில் நாகப்பாம்பை தோளில் போட்டு சாகசம் செய்த இளைஞனை பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொல்லம் பாரிப்பில்லியைச் சேர்ந்த சுனில் குமார் என்பவரை பாம்பு கடித்துள்ளது. இச்சம்பவம் செவ்வாய்கிழமை அதிகாலை 1 மணியளவில் நடந்துள்ளது. போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து பாம்பை விட்டுவிடுமாறு கூறிய போதும் அவர் மறுத்து சாகசம் காட்டியுள்ளார். இதற்கிடையில், பாம்பு அவரை கடித்தது.

கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அனில் குமாரை தேவசம் மருத்துவமனையில் சேர்த்தனர். முதன்மை சிகிச்சை அளித்த பிறகு அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி