நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்.. (வீடியோ)

82பார்த்தது
நாட்டிலேயே முதல்முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நீருக்கடியில் சுமார் 520 மீட்டர் நீளத்தை 45 நொடிகளில் மெட்ரோ ரயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர், பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து ரயிலில் பயணம் செய்தார். பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜூம்தார், எம்எல்ஏ சுவேந்து, அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பிரதமருடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி