பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் ? - பதிலளிக்க மறுத்த அண்ணாமலை

62பார்த்தது
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் ? - பதிலளிக்க மறுத்த அண்ணாமலை
பாஜக கூட்டணியில் இருந்து சமீபத்தில் அதிமுக விலகிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். பாஜக ஓபிஎஸ் கூட்டணி வைக்கும் பட்சத்தில், ஓ.பிஎஸ்க்கு நிலையான சின்னம் இல்லாததால் தாமரைச் சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்திப்பதாகவும், அதற்கு அவர் மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இடம்பெறுவாரா? அவரை பாஜக கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறதே? என்று இன்று பேட்டியின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அண்ணாமலை பதில் அளிக்க மறுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி