ஜிஎஸ்டி என்பது வரி அல்ல வழிப்பறி - ஸ்டாலின்

74பார்த்தது
ஜிஎஸ்டி என்பது வரி அல்ல வழிப்பறி - ஸ்டாலின்
மத்திய அரசின் ஜிஎஸ்டி என்பது வரி அல்ல வழிப்பறி என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்த தனது X தள பதிவில், 'தன் பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடியும்' என்று முதல்வராக இருந்தபோது எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், 'ஜிஎஸ்டி பொருளாதாரச் சுதந்திரம்' என்று 'ஒரே நாடு ஒரே வரி' கொண்டு வந்தார். அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
Job Suitcase

Jobs near you