ஏப்ரல் 19 கட்டாய விடுமுறை - சத்தியபிரதா சாகு

28778பார்த்தது
ஏப்ரல் 19 கட்டாய விடுமுறை - சத்தியபிரதா சாகு
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு, தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவில்லை என்றால் தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக ஊழியர்கள் 1950 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி