ஏப் 23 ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை

67பார்த்தது
ஏப் 23 ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து, ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி