குரூப்2, 2ஏ பணியிடங்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்குமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆண்டு அட்டவணையில் செப்டம்பர் 28 என குறிப்பிட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு, ஏற்கெனவே அறிவித்தபடி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகவல் அளித்துள்ளார்.