மது போதையில் மதிமயங்கிய மணமகன்: மணமகள் அதிரடி

1963பார்த்தது
உத்திர பிரதேச மாநிலம் கர்ஹால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கம்பீரா கிராமத்தில் எதிர்பாராத விதமாக திருமணம் ரத்து செய்யப்பட்டது. திருமண ஊர்வலத்தில் மணமகன் உற்சாகமாக நடனமாடினார். அவர் மதுபோதையில் இருந்ததாக மணமகள் சந்தேகப்பட்டார். பரிசோதனையில், மணமகனும், அவரது தந்தையும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. உடனே மணமகள் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். ஊர் பெரியவர்கள், உறவினர்கள் மணமகளிடம் பேசியும் அவர் தன் முடிவிலிருந்து பின் வாங்கவில்லை. இதனால் திருமணம் நின்று போனது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி