உத்தர பிரதேசத்தின் மீரட் நகர சாலையில், குதிரையில் கோட்டு சூட்டுடன் மணமகன் அமர்ந்திருக்க திருமண ஊர்வலம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அவரின் கழுத்தில் இருந்த பண மாலையை சிலர் கிழித்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் மாப்பிள்ளை அந்த வாகனத்தை துரத்தி சென்று பிடித்து நண்பர்களுடன் சேர்ந்து திருடனுக்கு தர்ம அடி கொடுத்தார். இதுதொடர்பாக வழக்குப்பதவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.