தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன என கூறி தமிழக ஆளுநர் தனது உரையை 4 நிமிடங்களில் முடித்துக்கொண்டு வெளியேறினார். இதனையடுத்து சட்டமன்ற பேரவையில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பதிவை ஆளுநர் ரவி மரபுகளை மீறி சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பதிவை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்ற விதிகளை ஆளுநர் ரவி மீறி உள்ளார். இது சட்டமன்ற மரபுகளை மீறிய செயல் எனப் பல்வேறு தரப்பினர் மீண்டும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.