கிருஷ்ணகிரி பர்கூரில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. என்.சி.சி பயிற்சிக்கு சென்ற 17 மாணவிகளில் 13 பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆசிரியை கோமதி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.