வந்தே பாரத் ரயில் சேவையை போல வந்தே மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தில் உள்ள அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் இன்று (செப்.16) பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார். 1,150 பயணிகள் அமரும் வசதிகொண்ட இந்த ரயிலில், 2,058 பயணிகள் நின்றுகொண்டு பயணிக்கலாம். மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த ரயில், 360 கி.மீ. தொலைவை 5 மணிநேரம் 45 நிமிஷங்களில் சென்றடையும்.