உத்திரப் பிரதேச மாநிலத்தின் போஜிபுராவை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அங்கித் மற்றும் பங்கஜ் ஆகிய இரண்டு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நேற்று (ஆகஸ்ட் 28) தெரிவித்தனர். மேலும் இரண்டு பேரில் ஒருவரை கைது செய்துவிட்டதாகவும் கூறினர்.