ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுக்கு இலவச உணவு!

71பார்த்தது
ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுக்கு இலவச உணவு!
இந்தியா, மாலத்தீவு பிரிவினையை மேலும் வலுக்கும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள விஜய் மிஸ்ராவிற்கு சொந்தமான 'மிஸ்டர். பட்டூரா' என்னும் உணவகத்தில் நூதன இலவச சலுகை ஒன்றை அறிவித்துள்ளனர். மாலத்தீவிற்கு செல்ல வாங்கப்பட்ட விமான பயணச்சீட்டை ரத்து செய்திருப்பின், அந்தப் பயணச்சீட்டிற்கு வட இந்தியாவின் பிரபல உணவான 'சோலே பட்டூரே' இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என உணவகம் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்லும் முனைப்பை ஏற்படுத்துவதே நோக்கம் என தெரிவித்துள்ளனர். இச்சலுகைக்கு அதிகரிக்கும் வரவேற்பினை தொடர்ந்து, மேலும் இவர்களது உணவக கிளைகளுக்கும் அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி