ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால் (34) திருமணத்திற்கு வரன் தேடும் வலைத்தளத்தில் விதவைகள், விவாகரத்தான பெண்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் சிக்கும் பெண்களிடம் தான் போலீஸ் எனவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி பணம் பெற்று அவர்களை ஏமாற்றி வந்துள்ளார். இதே போல் 5 பெண்களை ஒரே நேரத்தில் திருமணமும் செய்துள்ளார். இதுகுறித்து ஒரு பெண் அளித்த புகாரில் அவரை கைது செய்து விசாரித்ததில் இதுவரை 49 பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.