உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நான்காம் நாள் உற்சவத்தில் நேற்று (டிச., 07) சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் நாக வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபம் வருகிற 13ஆம் தேதி ஏற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது.