'ஈசன்' திரைப்படத்தின் "ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா..!" என்ற பாடல் மூலம் பிரபலமான நாட்டுப்புற பாடகி தஞ்சை செல்வியின் தற்போதைய பரிதாப நிலை கண்ணீரை வரவழைத்துள்ளது. புதுக்கோட்டையில் வசித்து வரும் தஞ்சை செல்வி, தான் முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு தனக்கு மருத்துவ உதவி செய்யக் கோரியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.