முன்னாள் எம்.பி., காலமானார்

62பார்த்தது
முன்னாள் எம்.பி., காலமானார்
கர்நாடக முன்னாள் எம்.பி., இக்பால் அகமது சர்தாகி (81) புதன்கிழமை காலமானார். இவர் சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கலபுர்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நள்ளிரவு 1 மணியளவில் உயிரிழந்தார். 1999 மற்றும் 2004ல் இரண்டு முறை எம்பியாகவும், ஒருமுறை எம்எல்சியாகவும் பதவி வகித்துள்ளார். அவரது மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி