முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது

74பார்த்தது
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தையூர் பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கி அத்துமீறி நுழைந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ராஜேஷ் தாஸின் முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் அளித்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

முன்னதாக ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து கேட்டு பீலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதே போல்,கடந்த 2021ஆம் ஆண்டு காவல்துறை பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி