மேற்குவங்க பாஜக பொதுச்செயலாளர் ராஜினாமா

78பார்த்தது
மேற்குவங்க பாஜக பொதுச்செயலாளர் ராஜினாமா
கொல்கத்தாவிலிருந்து 75 கி.மீ., தொலைவிலுள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள சந்தேஷ்காளி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி மீது பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜக திட்டமிட்டு நாடகமாடியதாக குற்றம்சாட்டி மேற்குவங்க மாநில பாஜக பொதுச் செயலாளர் சிரியா பர்வீன் இன்று (மே 24) திடீரென ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜக பொதுச் செயலாளரின் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி