கால்பந்து உலகின் ஜாம்பவான் என்று கருதப்படும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியாஸ் பிரெமி (63) காலமானார். 1990ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் உள்ள ரோம் நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை செய்தது. இந்தப் போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டிச் சென்றது. அந்த கோலை அடித்தவர் ஆண்ட்ரியாஸ் பிரெமி. இவரின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.