நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு இரும்புச்சத்து அவசியம். ஒரு நாளைக்கு ஒருவர் 10 மில்லிகிராம் இரும்புச் சத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பசலைக்கீரை, சிறுகீரை, முருங்கைகீரை போன்றவற்றில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் கீரையில் 2.5 மில்லிகிராம் வரை இரும்புச் சத்து உள்ளது. அதேபோல் முளைகட்டிய பயறு, தானியங்கள், அசைவ உணவுகள் ஆகியவற்றில் இரும்புச் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.