நம் உடலில் செரிமானம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு நார்ச்சத்து அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கலாம். உடல் நார்ச்சத்தை நன்கு உறிஞ்சுவதற்கு போதுமான தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, பீன்ஸ், முழு தானியங்கள், இலைக் காய்கறிகள், இனிப்பு உருளைக்கிழங்கு, கொட்டைகள், விதைகள் மற்றும் அத்திப்பழங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.