ரத்தத்தில் கெட்ட கொழுப்பு சேர்ந்தால் மாரடைப்பு, பக்கவாதம், மார்பு வலி ஏற்படும் அபாயங்கள் அதிகரிக்கும். எனவே நல்ல கொழுப்புகள் கொண்ட சரியான உணவுகளை சாப்பிடுவதோடு நடைப்பயிற்சி மற்றும் முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியவது அவசியமாகும். ரத்தத்தில் நல்ல கொழுப்பு அதிகரிக்க அக்ரூட் பருப்புகள், பாதாம், பிஸ்தா போன்றவற்றை சரியான அளவில் சாப்பிடலாம். டார்க் சாக்லேட், அவகோடா பழங்களும் நன்மை செய்யும்.