தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகவும், அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் திகழ்வது பழனி. அங்கு இன்று (ஆகஸ்ட் 24) அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த விழாவின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியை ஏற்றி வைத்தார்.