பாகிஸ்தானின் முதல் பெண் தலைமை நீதிபதி

67பார்த்தது
பாகிஸ்தானின் முதல் பெண் தலைமை நீதிபதி
பாகிஸ்தானின் லாகூர் உயர்நீதிமன்றத்தின் (LHC) தலைமை நீதிபதி பதவிக்கு உயர்ந்த முதல் பெண்மணி என்ற வரலாற்றை நீதிபதி ஆலியா நீலம் படைத்தார். இவர் கடந்த 25ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் லாகூர் உயர் நீதிமன்றத்தின் (LHC) தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இதன் மூலம் நீதிமன்றத்தின் உயர் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். அவரது நியமனத்திற்கு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்த ஒரு நாள் கழித்து அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி