டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

593பார்த்தது
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள எய்ம்ஸ் இயக்குநர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் 7 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி