பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள லியாகதாபாத் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிந்து அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். முதலில் அவசர சிகிச்சை பிரிவில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டது. பின்னர், குளிர்சாதன பெட்டியின் கம்ப்ரசர் உடைந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. இதனால் வார்டில் இருந்த சிலர் உயிருக்கு பயந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர். விபத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.