சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலக்கரி கையாளும் பங்கர் பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து, அவர்கள் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதி முழுவதும் சூடான நிலக்கரி நிரம்பி இருப்பதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.