சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கார்த்தி நடிக்கும் 'சர்தார்-2' படப்பிடிப்பின் போது, சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு நேற்று (ஜூலை 17) இரவு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, பெண் ஒருவர் “அப்பா கார்த்தி சார் வந்திருக்காருப்பா உன்ன பாக்க, எழுந்துருப்பா” என கதறி அழுதார். இதனைப் பார்த்த கார்த்தி ஆறுதல் சொல்ல முடியாமல் கண் கலங்கியபடி நின்றார்.