அத்திப்பழம் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை அளிக்கும் ஒரு பழமாகும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் தாமிரம் ஆகியவை உள்ளன. இரவில் பாலில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வந்தால், அது உடல் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை அளிக்கும். எடை இழப்பு, ரத்த சோகை, சரும பாதுகாப்பு, ரத்த சர்க்கரை அளவு, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை தரும். மேலும், இந்த அத்திப்பழம் பல பிரச்சனைகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.