தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தில் சட்டவிரோதமாகக் கருவின் பாலினத்தைக் கண்டறியும் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். இதனையடுத்து பாலினம் கண்டறியும் கும்பலை கைது செய்துள்ளனர். செவிலியர் உள்ளிட்ட இருவர் வசமாக சிக்கிய நிலையில் தப்பியோடிய இடைத்தரகர்கள் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.