திருத்தணி முருகன் கோயிலில் கட்டணம் குறைப்பு

80பார்த்தது
திருத்தணி முருகன் கோயிலில் கட்டணம் குறைப்பு
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.200/- லிருந்து ரூ. 100/- ஆக குறைக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் நாளை ஜூலை 26 முதல் 5 நாட்களுக்கு ஆடிக்கிருத்திகை திருவிழா தொடங்க உள்ளது. மேலும், டிசம்பர் 31-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் தேதி திருப்படி திருவிழா நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்தி