உத்திரப் பிரதேச மாநிலத்தில் தனது மகளை கடத்திவிட்டதாக தந்தை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து காணாமல் போன 13 வயது சிறுமி மீட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சிறுமியின் தந்தை, அவரது நண்பர் இருவரும் சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. அதன் காரணமாகவே சிறுமி தனது சகோதரர் மற்றும் நண்பருடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, சிறுமியின் தந்தை, அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.