தென்காசி: ஆழ்வார்குறிச்சி அருகே விவசாயி ஒருவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொக்கன் என்ற இருதயராஜ் (45) நேற்று (டிச.20) இரவு குளத்துக்கரையில் காவல் இருந்த போது, மர்ம நபர்கள் அவரை அரிவாளால் தாக்கி அவரது தலையை துண்டித்துக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்துப் பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.