பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஜனனி விபத்தில் சிக்கியுள்ளார். நடிகர் விஜய் உடன் "லியோ" படத்தில் ஒரு சின்ன ரோலில் ஜனனி நடித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது. இந்நிலையில், நிழல் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் ஜனனியின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காலில் பெரிய கட்டுடன் அவர் நடக்க முடியாமல் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.