அமெரிக்கா: பிரபல ஹிப்-பாப் பாடகி ஆங்கி ஸ்டோன் 63 கார் விபத்தில் உயிரிழந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில், அலபாமாவிலிருந்து அட்லாண்டாவுக்குத் திரும்பும் வழியில் ஆங்கி ஸ்டோன் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் ஆங்கி ஸ்டோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவருடன் காரில் பயணித்த 7 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர். ஆங்கி ஸ்டோன் 3 முறை கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.