அமேசானில் அயோத்தி போலி பிரசாதம்.. மக்களே உஷார்!

45169பார்த்தது
அமேசானில் அயோத்தி போலி பிரசாதம்.. மக்களே உஷார்!
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நெருங்கி வரும் நிலையில், ஆன்மிகம் என்ற பெயரில் ஆன்லைனில் போலி பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அயோத்தியின் பெயரில் போலி பிரசாதம் விற்பனை செய்ததாக அமேசான் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) அளித்த புகாரைத் தொடர்ந்து, அமேசான் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அயோத்தி ராம் மந்திர் பிரசாத் என்ற பெயரில் அமேசானில் விற்கப்படுவதாக தெரிகிறது. மக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி