பாகிஸ்தான் ஒகாரா மாவட்டத்தில் தேர்வில் தோல்வியடைந்தது குறித்து 9ம் வகுப்பு படிக்கும் தங்கை சஜிதாவிடம் அவரது அண்ணன் உசைன் கேள்வி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வந்த தாய் தனது மகனிடம் சண்டையை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த உசைன் தனது துப்பாக்கியை எடுத்து தங்கையை சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சஜிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.