தமிழ்நாட்டில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. விருப்பமுள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு விதிகள், விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.