சூர‌ஜ் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

51பார்த்தது
சூர‌ஜ் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சூர‌ஜ் ரேவண்ணாவின் நீதிமன்ற காவலை 18ம் தேதி வரை நீட்டித்து பெருநகர கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் அண்ணன் சூரஜ் ரேவண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், மேலும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், வரும் 18ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து சூரஜ் ரேவண்ணா பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி