முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கொசு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "கொசு பிரச்சனையை விட பேச வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. ரகசியம் ரகசியம் என தொண்டர்களை ஏமாற்றி வருகிறார் ஓபிஎஸ், அது தொண்டர்கள் மத்தியில் எடுபடாது. கொசுவை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.