ஹரியானாவை சேர்ந்த ஜோதி என்ற பெண் பகவான் கிருஷ்ணரின் தீவிர பக்தையாவார். கிருஷ்ணருக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த ஜோதி அது தொடர்பான ஆன்மீக நடைமுறைகளை கடந்த ஒரு வருடமாக பின்பற்றி வந்தார். இந்நிலையில் ’லட்டு கோபால்’ என்று அழைக்கப்படும் பகவான் கிருஷ்ணரை ஜோதி, பாரம்பரிய சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் பலரும் கலந்து கொண்ட நிலையில் தனது பெயரை மீரா என மாற்றி கொண்டார்.