டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

83பார்த்தது
மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் டைடல் பூங்காக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி பஞ்சப்பூரில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.403 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் 5.34 லட்சம் சதுர அடியில் ரூ.314 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது. டைடல் பூங்காக்கள் அமைக்க சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் இன்று (பிப்., 18) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நன்றி: TN DIPR

தொடர்புடைய செய்தி