பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட EVM (வீடியோ)

1093பார்த்தது
நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை(மே 7) நடைபெறுகிறது. மொத்தமுள்ள 93 மக்களவைத் தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கோடை காலம் என்பதால் காலையிலேயே ஏராளமான வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம், சங்கோலா தாலுகா பாகல்வாடியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. வாக்காளர் ஒருவர் EVM மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதனால் EVM சிறிது சேதமடைந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி