வயநாட்டில் தாளவாடியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் பலி

85பார்த்தது
வயநாட்டில் தாளவாடியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் பலி
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் அதிகமான பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து 2 நாள் துக்கம் (ஜூலை 30, 31) அனுசரிப்பதாக கேரள மாநில அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கனமழை காரணமாக திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 31-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே காமயன்புரம் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ரங்கசாமி, புட்டுசித்தம்மா, மகேஷ் ஆகியோர் சுமார் 30 வருடங்களாக கேரள மாநிலம் வயநாட்டில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர். தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் மேற்படி மூன்று நபர்கள் இறந்துள்ளனர். புட்டுசித்தம்மா என்பவரின் உடல் நேற்றய முன்தினம் தாளவாடிக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ரங்கசாமி என்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு தாளவாடி பகுதிக்கு கொண்டு வருவார் என கூறப்பட்ட நிலையில் பேரன் மகேஷின் உடல் தேடப்பட்டு வருகிறது. தாளவாடி பகுதியில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி